×

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க ஆளுநருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்கும்  அவசர சட்டத்தை ஆளுநர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆளுநரின்ஒப்புதலுக்காக அவசர சட்டம் அனுப்பி வைக்கப்பட்டு இன்றுடன் 16 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை அவசர சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்த பிறகே இதில் முடிவெடுக்க ஆளுநர் முடிவெடுக்க உள்ளதாக தெரிகிறது.

தமிழக அரசின் இந்த நல்ல முயற்சிக்கு ஆளுனர் துணையாக இருக்க வேண்டுமே தவிர, தேவையற்ற தாமதம் செய்து தடையாக இருக்கக்கூடாது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து குறிப்பிடப்பட வேண்டும். அதற்கு வசதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில்  தனி இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை ஆளுநர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.

Tags : governor ,Ramadas ,schools ,government school children , Government School Student, Medical College, Reservation, Emergency Law, Governor, Ramadas
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்