×

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 143 ஆக உயர்வு: அண்ணாநகர் மண்டலத்தில் அதிகம்

சென்னை: சென்னை மாநகரட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்படி சென்னையில் ஒரு தெருவில் ஒருவக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அந்த தெரு முழுவதையும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்திவந்தது. இந்நிலையில், ஒரு தெருவில் 5 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் நாளுக்கு நாள் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. 200க்கு மேல் இருந்த கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 100 ஆக குறைந்தது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களில் ஒரு குறிப்பிட்ட தெருவில் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் வைரஸ் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 50 கட்டுப்பாடு பகுதிகள் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அண்ணா நகர் மண்டலத்தில் 39 தெருக்களும், கோடம்பாக்கம் 13 தெருக்களும், வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூர் மண்டலத்தில் அடையாறு மண்டலத்தில் 10 தெருக்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 8 தெருக்களும், அம்பத்தூர் மண்டலத்தில் 7 தெருக்களும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 4 தெருக்களும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 3 தெருக்களும் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளன. குறிப்பாக அண்ணா நகர் மண்டலத்தில் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த கடந்த 30ம் தேதி நிலவரப்படி அண்ணா நகர் மண்டலத்தில் 4 தெருக்கள் கட்டுப்படுத்தபபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது,


Tags : Anna Nagar ,areas ,region , Corona impact, increase, number 143, rise
× RELATED ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் ஆற்றல்...