வெட்டு காயங்களுடன் வாலிபர் சடலம் மீட்பு

பெரம்பூர்: வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலை, புனித அந்தோணியார் ஆலயத்துக்கு வெளியே, ஒரு பெட்டிக்கடை அருகில் நேற்று காலை 7.30 மணியளவில் முகம், கழுத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு இறந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்தவரின் பெயர் ராஜா (எ) சின்னதம்பி (40) என்பதும், அதே பகுதியில் மது அருந்தி பிளாட்பாரத்தில் வசித்து வந்ததாகவும் தெரியவந்தது.

Related Stories:

>