×

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தினமும் விழிப்புணர்வு: செங்கை எஸ்பி தகவல்

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 6000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 பேர் இறந்துள்ளனர். செங்கல்பட்டு நகராட்சியில் மட்டும் 300க்கும் மேற்பட்டு, 10 பேர் இறந்துள்ளனர். செங்கல்பட்டு நகராட்சியில் நத்தம், ராமபாளையம், கோகுலாபுரம், ஓசுரம்மன்கோயில், ராஜாஜி தெரு, அனுமந்தபுத்தேரி உள்பட பல பகுதிகளில் கொரோனா தொற்று வேகமா பரவி வருகிறது. நகராட்சி ஆணையர் டிட்டோ, இளநிலை உதவியாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட, நகர காவல்துறை சார்பில், நோய் தொற்று அதிகமுள்ள நகராட்சி பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது. செங்கல்பட்டு எஸ்பி கண்ணன். ஆர்டிஓ செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஒளி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது, தொற்று பரவாமல் தடுக்க கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி தெளிக்க வேண்டும். தேவை இல்லாமல் வெளியில் வர வேண்டாம். மீறி வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவுறுத்தினர்.
இதுகுறித்து எஸ்பி கண்ணன் கூறுகையில், மாவட்டத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, வண்டலூர், காட்டாங்கொளத்தூர் ஆகிய பகுதிகளில் தினமும் மாலை நேரங்களில் சென்று, அங்குள்ள முக்கிய பிரதிநிதிகள், பொதுமக்களை சந்தித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் உயர் போலீஸ் அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். இதன்மூலம் பொதுமக்களுக்கு நோய்தொற்றின் பரவல் தடுப்பு குறித்து அறிந்து கொண்டு, பாதுகாப்பாக இருப்பார்கள் என்றார். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், தாசில்தார் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : public ,areas ,Chengai SP ,Corona , Corona Area, Public, Awareness, Chengy SP Information
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...