×

பொன்னேரியில் ஜமாபந்தி துவக்கம்: 13ம் தேதிவரை நடைபெறும்

பொன்னேரி: பொன்னேரி தாலுகாவில் நேற்று முதல் ஜமாபந்தி துவங்கியது. பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என தாசில்தார் தகவல் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் நேற்று முதல் வரும் 13-ம் தேதிவரை ஜமாபந்தி நடைபெறுகிறது. பொன்னேரி வட்டம், 9 குறுவட்டங்களில் 210 வருவாய் கிராமங்கள் உள்ளன. நேற்று முதல் துவங்கிய ஜமாபந்தியில், ஒவ்வொரு நாளும் ஒரு வட்டத்துக்கு என வருவாய் கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தங்களது வீட்டுமனை பட்டா, பெயர் மாற்றம், ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்ட வருவாய் சம்பந்தமான குறைகளை, அந்தந்த பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் பொதுமக்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

அந்த விண்ணப்பங்கள் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் மூலம் சரிபார்க்கப்பட்டு, வட்டாட்சியர் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். பொன்னேரி தாலுகா நோய்தடுப்பு நடவடிக்கைக்காக, தாலுகா அலுவலகத்துக்கு பொதுமக்கள் அலைய வேண்டாம். அந்தந்த பகுதியில் உள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து, ஜமாபந்தி மூலம் சான்றிதழ் பெற்று கொள்ளலாம் என பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், நேற்று சோழவரம் குறுவட்டம், நாளை ஞாயிறு குறுவட்டம், 3-ம் தேதி ஆரணி, 6-ம் தேதி பொன்னேரி, 7-ம் தேதி திருப்பாலைவனம், 8-ம் தேதி கோளூர், 9-ம் தேதி மீஞ்சூர், 10-ம் தேதி காட்டூர், 13-ம் தேதி புழல் ஒன்றிய பகுதிகளில் உள்ள மக்கள் இ-சேவை மூலம் விண்ணப்பங்களை பதிவுசெய்து சான்றிதழ் பெறலாம். மற்ற விவரங்களுக்கு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், கிராம உதவியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Jamapandi Opening ,Ponneri , Jamapandi, Ponneri, 13th
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு