×

மேக் இன் இந்தியாவில் தயாரான இரட்டை பயன் வென்டிலேட்டர்

புதுடெல்லி: நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா அனுப்பிய 100 வென்டிலேட்டர்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, நாட்டில் போதுமான வென்டிலேட்டர் இல்லை என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து, ‘பைலெவல் பாசிடிவ் ஏர்வே பிரஷர் வென்டிலேட்ட்ர’ (பிஐபிஏபி) எனப்படும் இரட்டை பயன்பாட்டு வென்டிலேட்டர்களை இந்தியா சொந்த தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ளது. இது அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பிஐபிஏபி என்பது, மூக்கில் குழாய் எதுவும் பொருத்தாமல் சுவாசிக்க உதவும் கருவியாகும். மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

Tags : India , Make in India, double use, ventilator
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...