×

தாய் தருவது பிறப்பு மருத்துவர்கள் தருவது மறுபிறப்பு

புதுடெல்லி: சுதந்திர போராட்ட வீர‍ரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான பி.சி. ராய் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதி, மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், `கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு நீங்கள் ஆற்றும் பணி, தியாகத்துக்கு நாடு தலை வணங்குகிறது,’ என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து, பிறர் உயிரை காப்பாற்றுகின்றனர். தாய் நமக்கு பிறப்பு அளிக்கிறார்; மருத்துவர்கள் மறுபிறப்பை அளிக்கின்றனர். தங்களை பற்றி கவலைப்படாமல் நமது வாழ்க்கையை காப்பாற்றுகிறார்கள்,’ என  கூறியுள்ளார்.


Tags : doctors ,birth , Mother, Birth, Doctors, Reincarnation
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா