×

தமிழகத்தில் 6-ஆம் கட்ட பொதுமுடக்கம்...ஜூலை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு..!!

சென்னை: தமிழகத்தில் வருகின்ற ஜூலை மாதம் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 6-வது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூலை மாதத்தின் 4 ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கில் மெடிக்கல் கடைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் தவிர அனைத்து கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஜூலை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது

இதனையடுத்து ஜூலை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தகவல் அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தின் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகம்...இலவசம்...!!

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5-ம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஜூலை 5 -ம் தேதி வரை அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்படும். முதியோர், நோயுற்றோர், ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Holidays ,Tamil Nadu , Government of Tamil Nadu, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...