×

என்.எல்.சி வெடி விபத்து: பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் எம்.சி. சம்பத் நேரில் சென்று ஆறுதல்!

நெய்வேலி: என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சென்று அமைச்சர் சம்பத் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர் சம்பத் தெரிவித்ததாவது, நெல்வேலி அனல்மின் நிலைய விபத்து மிகவும் வருத்தம் அளிக்கும் விதத்தில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளேன்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் விபத்தில் பலியானோர்க்கு 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் மேலும் லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண தொகையாக முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதையடுத்து, என்.எல்.சி நிறுவனத்தில் வருங்காலங்களில் இத்தகைய விபத்து நேரிடக்கூடாது என்ற சித்தியை கடைபிடித்து, பாய்லர்கள் வெடிக்காத வண்ணம் ஏற்பாடு செய்யப்படும் என நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகம் உத்திரவாதம் அளித்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விபத்தை தொடர்ந்து அனைத்து என்.எல்.சி அனல்மின் நிலையத்தையும் மூட வேண்டும் எனவும், பாய்லர் அனைத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நன்முறையில் உள்ளதாக சான்று அளிக்கப்பட்ட பின்னர் என்.எல்.சி நிறுவனத்தை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன். என்.எல்.சி நிர்வாகமும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு விபத்து இல்லாத  என்.எல்.சி நிர்வாகமாக நிகழ நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர் என அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.

Tags : Minister MCA ,home ,NLC ,families ,incident ,Comfort ,Minister ,Comfort Home , NLC explosion, Minister M.C. Sampath, comfort
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு