×

கொரோனா முடக்கத்தால் நாடுதிரும்ப முடியாமல் ஈரானில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 687 மீட்பு!!!

தூத்துக்குடி:  கொரோனா தாக்கத்தால் நாடு திரும்ப முடியாமல் ஈரானில் சிக்கி தவித்த 687 தமிழக மீனவர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தனர். அவர்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மாவட்ட ஆட்சியர் சதீப் நந்தூரி உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்தியாவில் கொரோனா தொற்று தற்போது அதிகளவில் விஸ்பரூபம் எடுத்து வருகிறது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. இந்த கொடூர கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவில் டெல்லி, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதை நாம் கண்கூடே பார்த்து வருகிறோம். இதனால், மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.

இந்நிலையில் அரசு பல்வேறு தடுப்பு முயற்சிகளை செய்து வருகிறது. அதில் முக்கியமான முழு பொது முடக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் பேருந்து போக்குவரத்துகள், விமான சேவைகள், ரயில் சேவைகள் மற்றும் கப்பல் சேவைகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், வெளிநாட்டில் வசிப்பவர்களும், வெளிமாநிலத்தில் வசிப்பவர்களும் சொந்த ஊர்களுக்கு வரமுடியாமல் அங்கேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, சற்று தளர்வுகள் அளித்துள்ள நிலையில், சிறப்பு கப்பல்கள் மூலம் ஈரானில் சிக்கி தவித்த 687 தமிழக மீனவர்களை தமிழகம் அழைத்து வந்துள்ளனர். அனைவரது உடலிலும் கிருமிநாசி தெளிக்கப்பட்டதுடன், அனைவருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதைகள் செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் உணவு சாப்பிட ஏற்பாடுகள் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, மீனவர்கள் அனைவரும் அரசு பேருந்துகள் மூலமாக பாதுகாப்பான முறையில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், மீனவர்கள் பெரும் மகிச்சியடைந்துள்ளனர்.

Tags : fishermen ,Iran ,Corona , Corona, Freeze, Return, Failure, Iran, Tamil Nadu Fishermen
× RELATED குமரி கடலோர பகுதிகளில் கொரோனா பரவி...