×

சீனாவிற்கு அடுத்த அடி..நெடுஞ்சாலைத்துறை பணிகளில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு இனி NO ENTRY: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தடாலடி..!!

டெல்லி: நெடுஞ்சாலைத்துறை பணிகளில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு இனி அனுமதி கிடையாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் இதில் கூட்டுத் திட்டமாக செயல்பட இருந்தாலும் சீன நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலை பணிகளில் அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறு, குறு, நடுத்தர தொழில் துறையில் சீனாவின் முதலீடு ஊக்குவிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவில் சாலை கட்டுமான பணிகளில் கூட்டு திட்டங்களில், சீனா நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இதற்காக மத்திய அரசு உறுதியான முடிவை எடுத்துள்ளது. நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களை தடை செய்யவும், இந்திய நிறுவனங்களுக்கு விதிகளை தளர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சில திட்டங்களில் சீன நிறுவனங்கள் இருந்தாலும், இனி வரும் காலங்களில் , சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் கட்டுமான விதிகள் சரியில்லாமல் உள்ள நிலையில் அதனை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
 
மேலும், அதனை மாற்றுவதன் மூலம், இந்திய நிறுவனங்கள் பயன்பெறும். தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் கூட்டு திட்டமாக இருந்தாலும், சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம். தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகள் ளை மேம்படுத்த வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கிறோம். சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் கூட்டு திட்டங்களை ஆதரிக்கிறோம். ஆனால், அவற்றில் சீனாவை சேர்க்க முடியாது. அந்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : companies ,Chinese ,phase ,Department of Corrections ,banner companies ,Nitin Gadkari ,India , China, Highways, Works, Chinese Companies, Union Minister, Nitin Gadkari
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...