×

கொரோனா முழு முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள உணவு சந்தைகள்...!

சென்னை:  கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் உணவு பொருட்களின் தேவை மற்றும் விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. கொரோனா முடக்கத்தால் வருமானம் ஈட்ட முடியாததால் மக்கள் அதனை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் 19 கொரோனா நச்சுக் கிருமியின் பெரும் தொற்றானது உலகளவில் பல லட்சம் மக்களைப் பாதித்தும், பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொண்டும் வரும் அபாயச் சூழல் தொடர்ந்து வருகிறது.

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகின்றனர். இதனால், அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் தொடர்ந்து நீடித்து வருவதால் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரரீதியாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகளவு பாதிக்கப்ட்டுள்ளவர்கள், ஏகப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களே ஆவர். வருமான முடக்கம், உணவுப் பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடும்,

விவசாய உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை, வேலையிழப்பு போன்ற பல்வேறு நெருக்கடிகள் இவர்களைப் பாதித்துள்ளனர். இதனால் உணவு பொருட்களின் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொன்னி, கிச்சடி சம்பா போன்ற உயர் ரக அரிசிகளின் வியாபாரம் குறைந்து சாதாரண அரிசிதான் தற்போது விற்பனையாகி வருகிறது. சிலர் வறுமையின் காரணமாக, நிவாரணமாக கொடுத்த ரேஷன் அரிசியை  சாப்பிட தொடங்கியுள்ளனர். ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்னரே சமையல் எண்ணெய் டன்கணக்கில் வியாபாரமாகும்.

மாதத்திற்கு 5 லிட்டர் சமையல் எண்ணெய் வாங்கிக்கொண்டிருந்தவர்கள் தற்போது பணமில்லாத காரணத்தினால் 2 லிட்டர் தான் வாங்குகிறார்கள் என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல காய்கறி விற்பனையும் வெகுவாக குறைந்துள்ளது. கருவாடு அதிகம் விற்பனையானால் நாட்டில் பஞ்சம் நெருங்கி கொண்டிருப்பதாக கிராமங்களில் பழமொழி ஒன்று கூறுவார்கள். தற்போது இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டிருப்பதாலும், விலைவாசி உயர்ந்திருப்பதாலும் கருவாடு விற்பனை அதிகரித்துள்ளது.

பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள வறுமை அன்றாட வியாபாரத்தையும் அதனை நம்பியுள்ள வியாபாரிகளையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலையிலிருந்து எப்போது? வெளிவருவோம் என அனைவரும் எர்த்திப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Tags : Corona, full freeze, food markets ...!
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...