×

என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலைய விபத்து தொடர்பாக பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட்

நெய்வேலி: என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலைய விபத்து தொடர்பாக பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.  காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : Gothandam ,accident ,NLC , NLC , Analmin Station Accident, General Manager Gothandam, Suspend
× RELATED நெய்வேலி என்எல்சி பாய்லர் வெடித்த...