×

பெல்லாரியை போல யாத்கிரியிலும் மாநகராட்சி ஊழியர்கள் மெத்தனம்!: கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் கண்ணியமற்ற முறையில் அடக்கம்

கர்நாடகா: பெல்லாரி மாவட்டத்தை அடுத்து யாத்கிரி மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர் உடல் மனிதாபிமானமற்ற முறையில் அடக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாளுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. பல இடங்களில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல் கண்ணியமற்ற முறையில் அடக்கம் செய்யப்பட்டு வரும் சம்பவங்களும் நடைபெற்று தான் வருகிறது. இந்நிலையில், கர்நாடகா மாநிலம் யாத்கிரி மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை அவமதிக்கும் விதத்தில்,  மனிதாபிமானமற்ற முறையில் மாநகராட்சி ஊழியர்கள் அடக்கம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று முன்தினம் பெல்லாரி மாவட்டத்தில் உயிரிழந்த 12 நபர்களின் உடல்களை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக அடக்கம் செய்யாமல் குழிக்குள் தூக்கி வீசி எறிந்தார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இனி இவ்வாறான நிகழ்வு நடந்துவிடக்கூடாது என்று கண்டிப்பான ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு நாளில் மீண்டும் கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை முறையான அடக்கமின்றி மாநகராட்சி ஊழியர்கள் குழிக்குள் தூக்கி வீசியுள்ளனர். இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். இதற்கு மேல் இவ்வாறான சம்பவம் நடைபெறக்கூடாது என எதிர்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் குரல் எழுப்பியுள்ளனர்.

Tags : Bellary ,corporation staff ,Coroner ,Belgrade ,death , Bellary, Pilgrimage, Corporation, Staff, Meditation, Corona, Body, Burial
× RELATED பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே...