×

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு: ஒரே நாளில் 1,199 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,199 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,199 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 1,27,322 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரேநாளில் 42,520க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. அங்கு இதுவரை 2.72 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 1.14 லட்சம் பேர் வரையில் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள பெரும்பலான மாநிலங்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை நீக்கி, இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. இருப்பினும், சமூக விலகல், முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாகப் பராமரித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றக் கோரி வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மக்கள் அரசின் அறிவிப்புகளை காற்றில் பறக்கவிடும் வகையில்தான் நாள்தோறும் வலம் வருகிறார்கள். இதனால் மீண்டும் அமெரி்க்காவின் பல்வேறு நகரங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஜூன் 10ம் தேதியில் இருந்து ஒருநாள் பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டாத நிலையில், இன்று பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : deaths ,US , coronavirus,US,death
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...