×

நெல்வேலி அனல்மின் நிலைய விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு தலா 1 கோடி வழங்குக..அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

சென்னை: நெல்வேலி அனல்மின் நிலைய விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். நெய்வேலியில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 2வது அனல்மின் நிலையத்தில் இன்று கொதிகலன் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது.

இதில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர, மேலும் 14 பேர் படுகாயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தும், அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் மிகுந்த வேதனையளிக்கின்றன என பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


alignment=



உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பல ஆண்டுகளாகவே நெய்வேலி அனல்மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் கடந்த இரு மாதங்களில் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டு 10 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இன்று நடந்த விபத்துக்கும், உயிரிழப்புக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகம் பெறுபேற்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், உயிரிழந்த 6 தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் தலா 1 கோடி இழப்பீடும், காயமடைந்த தொழிலாளர்களுக்கு தலா 50 லட்சம் நிதி உதவியும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

என்.எல்.சி. வளாகத்தில் உள்ள 30 ஆண்டுகளை கடந்த அனைத்து மின் உற்பத்தி அலகுகளையும் தற்காலிகமாக மூடுவதுடன், விபத்துகள் குறித்து உயர்நிலை குழு விசாரணைக்கும் ஆணையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Nelveli Analmin ,station accident ,victims , NLC ,NLC India,Anbumani Ramdoss
× RELATED கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில்...