×

சேலத்தில் ஒரே கிராமத்தில் 128 பேருக்கு கொரோனா பாதிப்பு : துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களால் வந்த வினை!!

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் பண்ணவாடியில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே இறுதிச்சடங்கில் பங்கேற்ற 58 பேருக்கு ஏற்கனவே கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி எண்ணிக்கை 90 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.உயிரிழப்பைப் பொருத்தவரை 1200-ஐத் தாண்டியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பண்ணவாடி கிராமத்தில் செல்வம் என்பவர் கடந்த 21-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு முதலில் கொரோனா உறுதியானது. பின்னர் நடந்த பரிசோதனையில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா கண்டறியப்ட்ட நிலையில் மேலும் 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் ஜூன் 30ந்தேதி மாலை நிலவரப்படி, கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 780 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 284பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் 493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3 பேர்  மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

Tags : village ,Salem ,mourners ,funeral , Salem, village, corona, victim, funeral, verb
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...