×

அதிகாரிகளின் அலட்சிய வட்டத்தில் அரக்கோணம்?: கொரோனா பாதிப்பு 400ஐ கடந்த நிலையில் மக்கள் பீதி!!!

அரக்கோணம்:  அரக்கோணத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் அங்கு போதிய தடுப்பு நடவடிக்கைகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரக்கோணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில், நோயை கட்டுப்படுத்த அதிகாரிகள் எவ்வாறு? நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சென்னையை அடுத்த அரக்கோணத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,  அரக்கோணத்தில் உள்ள அதிகாரிகள் மிகவும் அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு கூட்டிசெல்லப்படுகிறார்கள்.


alignment=



பின்னர், அவர்கள் இருந்த வீடுகளில் அல்லது தெருக்களில் எந்தவிதமான பிளீச்சிங் மருந்துகளும் தெளிக்கப்படுவதில்லை, மேலும், நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அரசு அதிகாரிகளின் தரப்பில் ஹோமியோபதி மருந்துகளோ? அல்லது கபசுர குடிநீரோ? ஏதும் வழங்கப்படுவதுதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒழுங்கானமுறையில் தடுப்புகள் கூட அமைக்கப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுபோன்ற அதிகாரிகளின் அலட்சியத்தால்  கொரோனா தொற்றானது வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரக்கோணத்தில் கொரோனா பாதிப்பு 400ஐ கடந்த நிலையில்,  அவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Arakkonam ,areas , Arakkonam ,corona affected areas, Hand Sanitaizing,
× RELATED பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது