×

மிகுந்த மனவேதனை அடைந்தேன்; நெய்வேலி என்.எல்.சி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: நெய்வேலி என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிவாரணமும் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5-வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேரை காணவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தொடர்ந்து, நெய்வேலி அனல்மின நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நெய்வேலி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷா பேச்சு:

நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அமித்ஷா முதல்வரிடம் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, நெய்வேலி என்.எல்.சி.யில் ஏற்பட்ட விபத்து மன வேதனையை அளிக்கிறது. விபத்து தொடர்பாக தமிழக முதலமைச்சரிடம் பேசினேன். மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என உறுதி அளித்தேன். நிவாரண பணிகளுக்காக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தில உள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags : NLC ,accident , I was greatly distressed; Nayveli NLC accident: Rs.
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...