×

கொரோனா பாதிப்பு: ஐஐஎம் அகமதாபாத் மாணவர்கள் குழு 2,300 குடும்பங்களுக்கு உதவி

அகமதாபாத்: கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் தன்னார்வலர்களான 80 பேர் கொண்ட இந்திய மேலாண்மை நிறுவனம் அகமதாபாத் அல்லது ஐ.ஐ.எம் அகமதாபாத் மாணவர்கள் குழுவானது 2,300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் 800 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி கரம் நீட்டியுள்ளனர். ஐ.ஐ.எம் அகமதாபாத் மாணவர்கள் குழு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள், நிதி உதவி, அனைவருக்கும் சேர்த்து சமூக சமையலறைகளை அமைத்தல் மற்றும் ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை அடைய உதவுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

“மொத்த பணிகளுக்காக சுமார் 14 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது. முக்கிய பங்களிப்புகள் ஐ.ஐ.எம்.ஏ ஊழியர்கள் மற்றும் ஐ.ஐ.எம்.ஏ சமூகத்ததை சேர்ந்தவர்கள் ஆவர். ketto.org தளத்திலும் நிதி திரட்டும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் சுமார் ரூ. 3 லட்சம் திரட்டப்பட்டது. ஐ.ஐ.எம்.ஏ மாணவர் நடத்திய ஆன்லைன் ஒர்க்க்ஷாப்  சுமார் ரூ .1.2 லட்சம் திரட்டியது, மற்றொன்று, பி.ஜி.பி மாணவர்கள் மூலம் ரூ.20 ஆயிரம் திரட்டப்பட்டது” என்று ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப் பணியின் குறிக்கோள் அரசாங்கம் மற்றும் பிற சிவில் சமூகங்களின் முயற்சிகளின் விரிசல்களால் பாதிக்கப்படுபவர்களை சென்றடைவதாகும் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. ஏழை வீடுகளைக் கொண்ட பகுதிகளில் ஒரு கணக்கெடுப்பை நடத்தி, மிகவும் தேவைப்படுபவர்களுக்கு உதவி வழங்க திட்டமிடப்பட்டது. கணக்கெடுப்பு முடிவுகளின்படி, மாணவர்கள் குழுவானது வீடுகளை சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் பச்சை வகைகளாக பிரித்தது.

கணக்கெடுப்பில் சுமார் 85% குடும்பங்கள் வழக்கமான வருமானத்தை ஈட்டவில்லை, சுமார் 54% குடும்பங்கள் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவின் எண்ணிக்கையை குறைத்துள்ளன, மேலும் பலருக்கு பி.டி.எஸ் வழியாக ரேஷன் கொள்முதல் செய்வதில் சிரமங்கள் உள்ளன என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

கணக்கெடுப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள், குடும்பங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பிரச்சினைகள் மற்றும் வீடுகளின் எண்ணிக்கை மற்றும் இருப்பிடத்தை அடையாளம் காண உதவியது, இது மிகவும் உதவி தேவைப்பட்ட பகுதியாகும், இது நிவாரணப் பணிகளைத் திட்டமிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : group ,IIM Ahmedabad ,families ,Corona , Corona, IIM, students, help
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.