×

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 4 கோடியே 60 லட்சம் பெண் குழந்தைகள் மாயம் : ஐ.நாவின் மக்கள் தொகை நிதியம் அதிர்ச்சி தகவல்

டெல்லி : இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 4 கோடியே 60 லட்சம் பெண் குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக ஐ.நாவின் மக்கள் தொகை நிதியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 2020ம் ஆண்டுக்கான உலகளாவிய மக்கள் தொகை பதிவை ஐ.நாவின் மக்கள் தொகை நிதியம் நேற்று வெளியிட்டது. அதில் இந்தியாவில் மட்டும் 6 கோடியே 60 லட்சம் பெண் குழந்தைகள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9ல் 1 பெண் குழந்தை பிரசவத்திற்கு மமுன்னரோ அல்லது பிறந்த பின்னரோ காணாமல் ஆக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண் குழந்தை மீதான மோகத்தில் பாலின பிரிவு செய்தல் காரணமாக உலக அளவில் 3ல் ஒரு பெண் குழந்தை இல்லாமல் ஆக்கப்படுவதாக ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெண் குழந்தைகள் இல்லாமல் ஆக்கப்படுவது கடந்த 50 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு கூறியிருக்கிறது. ஆண் குழந்தைகள் மீதான ஆர்வம் மற்றும் ஸ்கேனோ தெரபிகளின் வரவு ஆகியவற்றால் ஆண்டுதோறும் 4.5 லட்சம் பெண் குழந்தைகள் பிறக்காமலேயே போகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவில் பாலின சமத்துவமின்மையை ஏற்படுத்தும் என்றும் ஐ.நாவின் மக்கள் தொகை நிதியம் எச்சரித்துள்ளது.


Tags : India ,children ,UN ,UN Population Fund ,girls , India, 50 Years, 4 Crore 60 Lakhs, Girl, Children, Magic, UN, Population, Fund, Shock
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது