×

சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா டா..டா..!: ஹுவேய் ZTE தயாரிப்புகளை வாங்க அமெரிக்கா தடை !!!

வாஷிங்டன்: சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹுவேய் மற்றும் ZTE ஆகியவற்றிடம் இருந்து தொழில்நுட்ப சாதனங்களை வாங்க அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் உள்ள தொலைதொடர்பு கட்டமைப்புகளை எப்.சி.சி. எனப்படும் பெடரல் தொலைத்தொடர்பு ஆணையம் ஒழுங்கப்படுத்துகிறது. இந்நிலையில் அமெரிக்க தொலைத்தொடர்பு பணிகளில் ஹுவேய் மற்றும் ZTE ஆகியவற்றின் சாதனங்களை பயன்படுத்த எப்.சி.சி. ஆணையம் தடைவிடுத்துள்ளது.

சீன ராணுவம் மற்றும் சீனாவின் உளவு நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதால் இந்த இரண்டு நிறுவனங்களிடம் இருந்தும் தொலைத்தொடர்பு சாதனங்களை வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஆபத்து இருப்பதால் ஹுவேய் மற்றும் ZTE நிறுவனங்களின் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெடரல் தொலைத்தொடர்பு ஆணையம் விளக்கமளித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் சீனாவின் ஹுவேய் மற்றும் ZTE நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பீட்டில் சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதிரொலியாக 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்த அடுத்த நாளே அமெரிக்கா ஹுவேய் மற்றும் ZTE தொலைத்தொடர்பு நிறுவன சாதனங்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : US ,ZTE ,Huawei ,companies ,Chinese , Huawei bans US companies for buying ZTE products
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!