×

சங்கரா கலை கல்லூரியில் இன்று சமுதாய வானொலி மூலம் கல்வி ஒளிபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று முதல் வானொலி மூலம் கல்வி ஒளிபரப்பு துவங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடவும், வீட்டில் இருந்தே பாடங்களை கற்கவும் சமுதாய வானொலி மூலம் கல்வி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பிற கல்லூரி மாணவர்களும் கேட்டுப் பயன்பெறலாம்.

சங்கரா கல்லூரி பேராசிரியர்கள் ஒவ்வொரு துறையிலும் உள்ள முக்கியமான கலந்துரையாடல் முறையில் விளக்கமாக உரை நிகழ்த்த உள்ளனர். இந்த கல்வி ஒலிபரப்பில் கலந்துகொண்டு பயன்பெற விரும்பும் பிற கல்லூரி மாணவர்கள் https://forms.gle/dbHrJSa06JDY2KYG8 என்ற தளத்தில் பதிவு செய்யலாம். முற்றிலும் இளவசமாக சமூக சேவையாக இந்த கல்வி ஒலிபரப்பு நடத்தப்படுகிறது. அனைத்து துறை மாணவர்களுக்கும் இந்த கல்வி ஒலிபரப்பு நடைபெற உள்ளது. மேலும், சங்கரா கல்லூரி மாணவர்களுக்கும் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன. வானொலி வழி கல்வி 90.8 எப்எம் அலைவரிசையில் தினமும் காலை 8 மணி, மாலை 7.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

Tags : Sankara Art College ,Community Radio ,Education Radio ,Community Radio Today , Sankara Arts College, Today, Community Radio, Educational Broadcasting
× RELATED கல்வியின் பயன் என்ன?