×

புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு எதிராக போலீசார் தவறு செய்தால் உடனே என்னை தொடர்பு கொள்ளலாம்: செங்கை எஸ்பி கண்ணன் பேட்டி

செங்கல்பட்டு: பொதுமக்களுக்கு எதிராக போலீசார் தவறு செய்தால், எனது செல்போனுக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கலாம் என செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் தெரிவித்தார். சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் ஜூலை 5ம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பித்து சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று காலை ஏராளமானோர் பைக் மற்றும் கார்களில் வண்டலூர் மற்றும் பரனூர் சுங்கசாவடி வழியாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், இ பாஸ் இல்லாமல் சென்ற பலரை சென்னைக்கு திருப்பி அனுப்பினர். ஒரு சில வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் கூறியதாவது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் வாகனம் ஓட்டியதாக இதுவரை 35,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 31,750 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று (நேற்று) ஒரே நாளில் 971 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 28 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து, கண்காணிக்கப்படுகிறது. பரனுர், வண்டலூர், ஓஎம்ஆர், இசிஆர் ஆகிய பகுதிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியவசிய தேவையை தவிர, வெளியில் வரவேண்டாம்.

அதேநேரத்தில், போலீசார் பொதுமக்களிடம் கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களின் குறைகளை தீர்க்கவேண்டும். மாவட்டத்தில் உள்ள 28 காவல் நிலையங்களில், பொதுமக்கள் கொடுத்த  புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களுக்கு எதிராக  போலீசார் தவறு செய்தால்  9940277199 என்ற எனது செல்போனுக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கலாம். இது தொடர்பாக, உடனடியாக விசாரனை செய்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார் மீது உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படும். ஒவ்வொரு காவல்நிலையத்தின் முகப்பு பகுதியில்  எஸ்பி, டிஸ்பி, இன்ஸ்பெக்டர்களின் செல்போன் எண்கள் டிஸ்பிளே செய்யப்பட்டுள்ளன.பொதுமக்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.

Tags : public , Complaint, Public, Against, Cops Mistake, Contact Me, Sengi SP Kannan, Interview
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...