×

அம்மன் கோயிலில் நகைகள் கொள்ளை

புழல்: செங்குன்றம் நாரவாரிகுப்பம் அண்ணா தெரு பகுதியில் துர்கை அம்மன் கோயில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கில் ஒரு சிலரே அவ்வப்போது கோயிலுக்கு வருகை தருவார்கள்.
இந்நிலையில், நேற்று காலை கோயிலுக்கு பக்தர் ஒருவர் தரிசனம் செய்து விட்டுச் சென்றுள்ளார். அதற்கு பிறகு, அம்மனின் கழுத்தில் இருந்த 22 பவுன் தங்க நகைகள் திடீரென காணாமல் போனது. புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : jewelery ,temple ,Amman , Amman temple, jewelery, booty
× RELATED தென்காசியில் தம்பதியரை கட்டிப்போட்டு 106 பவுன் நகை கொள்ளை