×

2 போலீசாருக்கு கொரோனா: காவல் நிலையம் மூடல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது. ஊத்துக்கோட்டை அருகே பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு எஸ்.ஐ உட்பட 24 போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் 2 போலீசாருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்நிலையில், அவர்களுக்கு நேற்று மாலை கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த 2 போலீசாரும் பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். கச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார துறையினர் பென்னலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு கிருமி நாசினி தெளித்தனர். பின்னர், காவல் நிலையத்தை பூட்டி சீல் வைக்கப்பட்டது. தற்போது, பென்னலூர்பேட்டை காவல் நிலையம் அம்மம்பாக்கம் கிராம சேவை மையத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

Tags : Closure ,Corona ,police station , 2 Corona to police, police station, closure
× RELATED 2 ஏட்டு உள்பட 5 போலீசாருக்கு கொரோனா: மதுராந்தகம் காவல் நிலையம் மூடல்