×

விளம்பரத்தால் மறைக்கப்படும் வேலைவாய்ப்பின்மை: பிரியங்கா குற்றச்சாட்டு

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநில இளைஞர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்லும் சூழலில், வெற்று விளம்பரங்களின் மூலம் கடும் வேலைவாய்ப்பின்மையை உத்தரப் பிரதேச அரசு மறைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது நேற்றைய டிவிட்டரில், ``உ.பி.யில் வேலை வாய்ப்பு இல்லை. அதனால் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் மீண்டும் வேலை செய்த இடங்களுக்கு வேலை தேடி புறப்படுகின்றனர். இங்கிருந்து வேலை தேடி 1.5 லட்சம் இளைஞர்கள் மும்பை சென்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மாநில அரசோ, மாபெரும் வேலைவாய்ப்பின்மையை வெற்று விளம்பரங்களின் மூலம் உண்மையை மறைத்து வருகிறது’’ என குறிப்பிட்டு, அத்துடன் உ.பி. வேலைவாய்ப்பின்மை குறித்து இளைஞர் ஒருவர் கூறும் வீடியோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.

Tags : Priyanka , Advertisement, cover up, unemployment, Priyanka, indictment
× RELATED தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது...