×

கேரளாவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

திருவனந்தபுரம்: கேரளாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அங்கு கடந்த மார்ச் மாதம் நடந்த 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில், 4 லட்சத்து 22 ஆயிரத்து 92 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.  திடீரென அமலானஊரடங்கினால், நிறுத்தப்பட்டிருந்த தேர்வுகள் மே 26 முதல் 30ம் தேதிவரை நடத்தப்பட்டன. இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று (30ம் தேதி) பிற்பகல் வெளியானது. கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் முடிவுகளை வெளியிட்டார். இதில் 98.82 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட 0.71 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகமாகும்.

Tags : Kerala , Kerala, 10th Class, Exam Results, Issue
× RELATED 10ம் வகுப்பு தேர்வு முடிவு: வரும் 10ம் தேதி வெளியாகிறது