×

பாகிஸ்தான் பங்குச்சந்தையில் தீவிரவாதிகள் தாக்குதல் மும்பையில் பாதுகாப்பு உஷார்

மும்பை: பாகிஸ்தான் பங்குச்சந்தை கட்டிடத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. கராச்சி நகரில் உள்ள பாகிஸ்தான் பங்குச்சந்தையில் நேற்று முன்தினம் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 10 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான கேட்வே ஆப் இந்தியாவில் உள்ள தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தவிர மும்பை நகரில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, தாஜ் ஓட்டல் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படும் என்று பாகிஸ்தானில் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பில் பேசிய ஆசாமி மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை உறுதிப்படுத்த மும்பை போலீசார் மறுத்து விட்டனர். எனினும் தாஜ் ஓட்டலுக்கு வெளியே ஆயுதம் தாங்கிய கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

Tags : Militants ,Mumbai ,Pakistan , Pakistan Stock Exchange, Terrorists, Attack, Mumbai, Security
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...