×

59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை நாங்க எந்த தப்பும் செய்யலீங்க... நீங்க சொல்றபடியே செய்றோம்... தப்பிக்க வழியில்லாததால் கெஞ்சுகிறது டிக் டாக்

புதுடெல்லி: மத்திய அரசு 59 சீன ஆப்களுக்கு தடை விதித்த நிலையில், இந்திய அரசுடன் தொடர்ந்து இணக்கமாக செயல்படுவதாகவும், இந்திய பயனர்களின் தகவல்களை சீனா உள்ளிட்ட எந்த வெளிநாட்டு அரசுகளுடனும் பகிரவில்லை என்றும் டிக் டாக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. லடாக் மோதலை தொடர்ந்து, சீனாவுக்கு வர்த்தக ரீதியாகவும் நெருக்கடி தர வேண்டுமென்று, உலகப் புகழ்பெற்ற அதன் டிக் டாக், யூசி பிரவுசர், ஹலோ உள்ளிட்ட 59 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் அதிரடியாக தடை விதித்தது.

இந்த ஆப்கள் அந்நிய நாட்டிற்கு இந்திய பயனர்களின் தகவல்களை விற்பதாகவும், இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், தேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் உலக அளவில் இந்தியாவில் அதிக பயனர்களை கொண்ட டிக் டாக் நிறுவனம் கடுமையான பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், டிக் டாக்  நிறுவனத்தின் இந்திய தலைவர் நிகில் காந்தி நேற்று தன்னிலை விளக்க அறிக்கை வெளியிட்டார்.

அதில், ‘‘இந்திய அரசு 59 ஆப்களுக்கு இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து அதற்கான செயல்பாடுகளுக்கு இணங்கி உள்ளோம். எங்கள் தரப்பில் பதிலளிக்கவும், விளக்கம் தரவும் அரசிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. இந்திய சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து தகவல் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கு தொடர்ந்து இணக்கமாக இருக்க தயாராக உள்ளோம். மேலும் இந்திய பயனர்களின் தகவல்களை சீனா உள்ளிட்ட எந்த வெளிநாட்டு அரசாங்கத்துடனும் நாங்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. எதிர்காலத்தில் அதுபோல தகவல் கோரப்பட்டாலும் நாங்கள் அவற்றை கொடுக்க மாட்டோம். பயனர் தனியுரிமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.

* தாமாக முன்வந்து வெளியேறியது
மத்திய அரசு தடை விதித்த சில மணி நேரத்திலேயே, அதுபற்றி டிக்டாக் நிறுவனம் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் டிக்டாக் விரைவில் அரசிடம் விளக்கம் தரும். மேலும், தடை விதிக்கப்பட்டதால், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இருந்து டிக் டாக் தாமாக முன்வந்து வெளியேறியது. இதை தொடர்ந்து டிக் டாக் செயலி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

* தடை செய்யப்பட்ட சீன ஆப்கள்
1, டிக்டாக், 2. ஷேர்இட், 3. குவாய், 4. யூசி பிரவுசர், 5. பைது மேப், 6. ஷேன், 7. கிளாஷ் ஆப் கிங்ஸ், 8. டியூ பேட்டரி சேவர், 9. ஹெலோ, 10. லைக்கி, 11. யூகேம் மேக்கப், 12. மீ கம்யூனிட்டி, 13. சிஎம் பிரவுசர்ஸ், 14. வைரஸ் கிளீனர், 15. ஏபியூஎஸ் பிரவுசர், 16. ரோமீ, 17. கிளப் பேக்டரி, 18. நியூஸ்டாக், 19. பியூட்ரி பிளஸ், 20. வீசாட், 21. யூசி நியூஸ், 22. க்யூக்யூ மெயில், 23. வெய்போ, 24. ஷெண்டர், 25. க்யூக்யூ மியூசிக்ஸ், 26. க்யூக்யூ நியூஸ்பீட், 27. பிகோ லைவ், 28. செல்பீ சிட்டி, 29. மெயில் மாஸ்டர், 30. பேரலல் ஸ்பேஷ், 31. மீ வீடியோ கால் - ஷியோமீ, 32. வீசிங், 33. இஎஸ் பைல் எக்ஸ்புளோரர், 34. விவா வீடியோ - க்யூயூ வீடியோ இன்க், 35. மெய்து, 36. விகோ வீடியோ, 37. நியூ வீடியோ ஸ்டேடஸ், 38. டியூ ரிக்கார்டர், 39. வால்ட் - ஹைட், 40. கேச்சே கிளீனர் டியூ ஆப் ஸ்டூடியோ, 41. டியூ கிளீனர், 42. டியூ பிரவுசர், 43. ஹகோ பிளே வித் நியூ பிரண்ட்ஸ், 44. கேம் ஸ்கேனர், 45. கிளீன் மாஸ்டர் - சீட்டா மொபைல், 46. வொண்டர் கேமரா, 47. போட்டோ வொண்டர், 48. க்யூக்யூ பிளேயர், 49. வீ மீட், 50. ஸ்வீட் செல்பீ, 51. பைது டிரான்ஸ்லேட், 52. வீமேட், 53. க்யூக்யூ இன்டர்நேஷனல், 54. க்யூக்யூ செக்யூரிட் சென்டர், 55. க்யூக்யூ லாஞ்சர், 56. யூ வீடியோ, 57. வீ ப்ளை ஸ்டேடஸ் வீடியோ, 58. மொபைல் லெஜன்ட்ஸ், 59. டியூ பிரைவசி.

Tags : government ,Chinese , 59 China App, Federal Government, Prohibition, Tic Tac
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...