×

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்: மத்திய அரசு ஆணை வெளியீடு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன் புதிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கிளையில், மத்திய அரசு சார்பாக ஆஜராக, மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்து வந்தார். அந்த பதவிக்கு தற்போது புதிதாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன் என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த பதவியில் இவர் மூன்று ஆண்டுகள் வரை இருப்பார் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Solicitor General ,Madras High Court ,Madras , Madras High Court, New Additional Solicitor General, Appointment, Central Government Order
× RELATED அதிமுக-வில் புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு தடைகோரிய வழக்கு ஒத்திவைப்பு