×

வேலூர் சிறையில் நளினி-முருகன் வீடியோ காலில் பேசியதாக போலீஸ் தகவல்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும், சிறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக நளினியையும், முருகனையும் சந்தித்துப் பேச சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் முருகன் சிறையில் ஜூன்1ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவகிறார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், நளினியும் முருகனும் சந்தித்து பேச அனுமதி வழங்க கோரியும் நளினியின் தாய் பத்மா, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, நளினி மற்றும் முருகன் வீடியோ கால் மூலமாக 30 நிமிடம் பேசினார். இதைத்தொடர்ந்து முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டதாகவும்  நீதிமன்றத்தில் சிறைத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினியின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

Tags : Nalini-Murugan ,Vellore Jail ,Vellore , Vellore jail, Nalini-Murugan video, police information: iCord case, termination case
× RELATED பெண்களை குறிவைக்கும் `மன்மத ராசாக்கள்’ வீடியோ காலில் குவியும் புகார்கள்