×

2021ம் பாடத்திட்டத்தில் கொரோனா வைரஸ்: மேற்கு வங்க அரசு தீவிரம்

கொல்கத்தா: கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் கொரோனா வைரஸ் பாடத்தை சேர்ப்பதற்கு மேற்கு வங்க அரசு திட்டமிட்டு வருகின்றது. சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் தொற்று உலக நாடுகளை பாடாய்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மேற்குவங்க மாநில கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி சமீபத்தில் கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் மற்றும் கொரோனா வைரசை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பள்ளிப்பாடங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதன்படி, தற்போது கொரோனா நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2021ம் ஆண்டு பள்ளி பாடத்திட்டத்தில் கொரோனா குறித்த பாடத்தை சேர்க்க மேற்கு வங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பாடத்திட்ட கமிட்டியின் தலைவர் அவீக் மஜூம்தர் கூறுகையில், “கொரோனா பாடத்திட்டத்தை சேர்ப்பது குறித்து கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் ஆலோசித்து வருகின்றனர். ஜூனியர் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புக்கள் வரை கொரோனா வைரஸ் தலைப்பில் பாடத்தை அறிமுகம் செய்வதற்கான திட்டங்கள் உள்ளன. ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் தவிர மருத்துவர்கள், வைரலாஜிஸ்ட்டுக்கள் கருத்துகளையும் கேட்பது அவசியமாகும்” என்றார்.

Tags : Corona ,West Bengal , 2021 Course, Coronavirus, West Bengal Government
× RELATED கொரோனா வைரஸை சீனா திட்டமிட்டு...