×

இன்ஸ்பெக்டர்கள் உட்பட 26 போலீசாருக்கு கொரோனா

சென்னை: சென்னையில் உளவுத்துறை பெண் இன்ஸ்பெக்டர், வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் என 3 இன்பெக்டர் உட்பட 26 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து 26 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐஐடி மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். இவர்களுடன் பணியாற்றிய சக போலீசாரையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் துறையில் நேற்று வரை 1,155 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றில் இருந்து குணமடைந்து இதுவரை 462 பேர் பணிக்கு திரும்பி உள்ளனர்.

Tags : Corona ,inspectors , Inspectors, 26 To the Police, Corona
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...