×

சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் 3 ஆண்டுகள் கடந்து பணியாற்றியுள்ளார். 2017-ம் ஆண்டு மே 15-ம் தேதி சென்னை காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டார். ஏ.கே.விஸ்வநாதன் தமிழக செயலாக்கம் பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மொத்தம் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய மண்டல ஐஜியாக இருந்த அமல்ராஜ் சென்னை ஆணையரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்படடுள்ளார்.

திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த லோகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏடிஜிபி டாக்டர் ரவி சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டிஐஜி கண்ணன் ஐஜியாக பதவி உயர்வு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 டிஐஜிகள் ஐஜியாக பதவி உயர்வு செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். துணை ஆணையர் மயில்வாகனனுக்கு டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் முத்துசாமிக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் இணை ஆணையராக சென்னை வடக்குக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : IPS officers ,Chennai Metropolitan Police Commissioner ,AK Viswanathan , 39 IPS officers, Chennai Metropolitan Police, Commissioner ,AK Viswanathan, transferred
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...