×

‘‘டார்ச்சர் தாங்க முடியல, மனைவியை கைது பண்ணுங்க’’ செல்போன் டவர் மீது ஏறி கணவன் தற்கொலை மிரட்டல்

சென்னை:   பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (27), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி, திருமணமாகி 5 ஆண்டுகள் ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரஜ்சித்குமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு வருவது வழக்கம். அதன்படி ரஞ்சித்குமார், நேற்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், மனைவியை கைது செய்ய வலியுறுத்தி திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

ஆனால் போலீசார், ரஞ்சித்குமாரை அங்கிருந்து விரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், அங்கிருந்த 120 அடி உயர செல்போன் டவரின் மீது ஏறி, ‘‘எனது மனைவி மீது வழக்கு பதிவு செய்யுங்கள். உடனடியாக கைது செய்து சிறையில் அடையுங்கள். இல்லாவிட்டால் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன்’’ என மிரட்டல் விடுத்தார். போலீசார், சுமார் 1 மணி நேரம் போராடி அவரை மீட்டு, அறிவுரை கூறி மனைவியுடன் அனுப்பி வைத்து அனுப்பினர்.

Tags : Torcher ,suicide ,cell phone tower ,cell tower Husband , Phone tower, husband, suicide threats
× RELATED கடன் தொல்லையால் கணவர் மாயம் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை: தாய் தற்கொலை