×

என் வாழ்க்கை பயணம் உங்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும்: சமக தலைவர் சரத்குமார் காட்டமான அறிக்கை

சென்னை: என்னுடைய வாழ்க்கை பயணம் பொய் செய்தி வெளியிடுபவர்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: நான் கணிதம் பயின்றுவிட்டு சைக்கிளில் சென்று பத்திரிக்கை விநியோகம் செய்கின்ற இளைஞனாக வாழ்க்கையை துவங்கி, சைக்கிள் பழுது பார்ப்பவனாக, பத்திரிக்கை நிருபராக, பயண நிறுவனம் நடத்துபவனாக, திரைப்பட தயாரிப்பாளராக, நடிகனாக, சமூக சேவகனாக, பிறர் நலம் விரும்பியாக, அரசியல்வாதியாக பயணித்த அனுபவத்தில் இதை எழுதுகிறேன்.

தரமான, நேர்மையான பத்திரிக்கை தொலைக்காட்சிகள் இணையதளம் நடுவே ஒரு சில இணையதள செய்திகள் தருகின்ற தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகளால் பலருக்கு ஏற்படும் வேதனை, அவர்கள் அடையும் துயரங்கள் எண்ணற்றவை. உங்களுக்கெல்லாம் உணர்வுகளே கிடையாதா. மனசாட்சி என்பதை இறக்கி வைத்து விட்டீர்களா, பேனா முனையின் வலிமையை எதற்கு பயன்படுத்த வேண்டும், உங்கள் அறிவை ஆக்க சக்தியாக மாற்ற வேண்டும் என்ற உணர்வே உங்களை போன்றவர்களுக்கு கிடையாதா?

பதிவிட்ட செய்தி உண்மையா, இல்லையா என தெரிந்து கொள்ளாமல் அதை மற்றவர்களும் ஆனந்தத்தோடு பகிர்வது வேதனை அளிக்கிறது. நான், என் குடும்பம், என் வாழ்க்கைப்பயணம் உங்களை போன்றவர்களுக்கு சற்று எரிச்சலாகத்தான் இருக்கும். என் வாழ்க்கையின் சோகங்கள், வேதனைகள் என்பதை தாண்டி வாழ்வதற்கே, வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும். அதிலும் நியாயத்திற்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு பிறர் வீழ்ச்சியில் அல்ல, என் முயற்சியில் இருக்க வேண்டும் என்று பயணிப்பவன் நான். தமிழ் உறவுகளின் ஆதரவு என்னை வெற்றி பெற செய்யும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


Tags : Samantha Kumar , My life, travel, community leader Sarathkumar, report
× RELATED திருச்சியில் போலியாக விவசாய...