×

சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை

சென்னை: சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையை விட வரும் ஆண்டுகளில் அதிக மழை பெய்யும் என்று சென்னை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை பெய்வதுடன் பெருவெள்ளம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

சென்னையில், கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 30 முதல்  டிசம்பர் 4 வரை கனமழை பெய்தது. அதிகபட்சமாக 33.32 சதவீதம் பெய்த இந்த மழையால், சென்னை வெள்ளத்தில் மிதந்தது. 2015 சென்னை பேரழிவு என்பது, 100 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவு ஆகும். 2015 ஆம் ஆண்டில், நவம்பர் மற்றும் டிசம்பரில், வடகிழக்கு பருவமழை காலத்தில் கடும் மழை பொழிந்து பேரழிவை ஏற்படுத்தியது. மழை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கியது. இக்காலத்தில் பெய்த 3 பெருமழைகளின் காரணமாக சென்னை நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், கடலோர நகரங்களில் பருவநிலை மாற்றம், அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆய்வு மேற்கொண்டது. சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கொல்கத்தா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்தியாவின் கடலோர பகுதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பருவநிலையில் செயற்கையாக திணிக்கப்படும் மாற்றங்களால், வரும் ஆண்டுகளில், 2015ம் ஆண்டு கொட்டித்தீர்த்த கனமழையை விட, அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், பெருவெள்ளம் ஏற்படும் எனவும் சென்னை ஐஐடி எச்சரித்துள்ளது.



Tags : Chennai , Chennai, rain
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...