×

வரலாற்றில் இப்பதான் இப்படி நடக்குது….! முதலமைச்சராக நீடிக்க தகுதி இழந்த பழனிசாமி; மு.க.ஸ்டாலின் காட்டம்

சென்னை: சாத்தான்குளம் இரட்டைக்கொலை முதலமைச்சராக  நீடிக்க தகுதி இழந்த பழனிச்சாமி என்ற தலைப்பில் திமுக திமுக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

* சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு சென்ற நீதிபதி உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அளித்த அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. கூடுதல் டிஎஸ்பி மிரட்டும் பார்வையுடன், உடல் அசைவுடன் நின்றார்.

* காவல் நிலைய பொது நாட்குறிப்பில் மற்றும் இதர பதிவேடுகளை சமர்ப்பிக்கவில்லை.

* சிசிடிவி பதிவுகள் தினம்தோறும் அழிந்து போகும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

* சம்பவ தினத்தின் காணொளி  பதிவுகள் அழிக்கப்பட்டிருந்தன.

* காவலர்கள் கிண்டல் செய்ததால் சாட்சியை பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

* விடிய விடிய லத்தியால் அடிக்கப்பட்டு – லத்தி மற்றும் டேபிளில் இரத்தக்கறை படிந்துள்ளது.

* காவலர் மகாராஜா உன்னால ஒன்னும் புடுங்க முடியாது என்று கூறினார். ஒருமையில் பேசினார்.

* போலீசார் விசாரணையை செல்போனில் பதிவு செய்து மிரட்டி கொண்டிருந்தார்கள்.

இவையெல்லாம் துறை அமைச்சர் முதல்வருக்கு தெரியாமல் நடந்தனவா ? இருவரும் உடல்நலக் குறைவு மூச்சுத் திணறலால் மரணம் அடைந்தார்கள் என்று முதலமைச்சர் சொல்வதன் பின்னணி என்ன ? கொலைகளை மறைக்க முதல்வரும் இணைந்து செயல்பட்டாரா ? இப்போது பாலியல் புகார் நிலுவையில் உள்ள முருகன் ஐ.ஜி.யாகவும், குட்கா வழக்கில் விசாரிக்கப்பட்ட ஜெயக்குமார் எஸ்பி ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளது ஏன் ?
வரலாற்றில் முதல்முறையாக வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் காவல்துறை மாற்றப்பட்டிருக்கிறது.

ஒரு காவல் நிலையத்தை கூட நிர்வகிக்க முடியாமல் உண்மையை மறைத்த முதல்வர் பழனிச்சாமி முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார். பதவியை விட்டு செல்ல மனமில்லை என்றால் போலீஸ் துறையை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்வதோடு மறைக்கத் துணைபோன வர்களையும் குற்றவாளிகளாக சேர்க்கவேண்டும். அப்பாவிகளாக காவல் நிலையத்திற்கு வந்து, பிரேதங்களாக அனுப்பப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags : MK Stalin ,Chief Minister , History, Chief Minister, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...