×

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து: நாடு முழுவதும் உடனடியாக செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து அவசியமாகத் தேவைப்படும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வு நடைபெற்றது. மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் தடுப்பு மருந்து, மருத்துவ விநியோகச் சங்கிலி மேலாண்மை, பாதிப்புக்குள்ளானோருக்கு முன்னுரிமை, இந்த நடைமுறையில் சம்பந்தப்பட்ட பல்வேறு முகமைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவை இந்த தேசிய முயற்சியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் மக்கள் பங்கேற்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இதற்கான நான்கு வழிகாட்டு முறைகளை பிரதமர் விளக்கினார்.

1. பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்புள்ள பிரிவினர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு முதலில் தடுப்பு மருந்து அளிக்கப்பட வேண்டும்.

2. எல்லா இடத்திலும் உள்ள அனைவருக்கும் தடுப்பு மருந்து கொடுக்கப்பட வேண்டும், அதாவது, தடுப்பு மருந்து பெறுவதற்கு வசிப்பிடம் சார்ந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடாது.

3. தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும் - யாரும் விடுபடக்கூடாது.

4. தடுப்பு மருந்துத் தயாரிப்புக்கான முழு நடைமுறையும் கண்காணிக்கப்படுவதுடன், தொழில்நுட்பப் பயன்பாட்டு ஆதரவு அளிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் உரிய காலத்திற்குள் தடுப்பு மருந்து கிடைக்கச் செய்யும் தேசிய முயற்சிக்கு உறுதுணையாக, தொழில்நுட்ப வாய்ப்புகளை விரிவான வகையில் மதிப்பீடு செய்யுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இத்தகைய பெரிய அளவில் தடுப்பு மருந்து தயாரிப்பதற்கான விரிவான திட்டமிடுதல் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்.



Tags : Modi ,Corona ,study session ,implementation , Corona, vaccine
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...