×

சீனாவில் பன்றியிலிருந்து பரவும் புதிய ஜி-4 வைரஸ் பெருந்தொற்றாக மாற வாய்ப்பு: ஆராய்ச்சியாளர்கள் தகவல்

பீஜிங்: சீனாவில் பன்றியில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் மூலம் மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய வைரஸ் குறித்து சீன மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறும்போது, “மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் பன்றியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. பன்றிப் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ரத்தத்தில் இந்த வைரஸ் காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொடர்பாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

2011 முதல் 2018 வரை மேற்கொண்ட பன்றிகளில் உள்ள ஃப்ளூ வைரஸ் பற்றிய ஆய்வில் புதிய ஜி-4 என்கிற ஹெச்1என்1 பன்றிக்காய்ச்சல் வைரஸ் இருப்பதையும் அது மனிதர்களுக்குத் தொற்றி இன்னொரு பெருந்தொற்றாக மாறக்கூடிய வாய்ப்புகள் கொண்டிருப்பதாகவும் சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உலகச் சுகாதார அமைப்பும் இந்த ஆய்வின் மீது கவனம் குவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது பன்றியிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் zoonotic தன்மையைக் கொண்டது என்பதாலும் சீனாவில் அடர்த்தியாக மக்கள் வசிக்கும் இடங்கள் கண்காணிக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.



Tags : virus outbreak ,China , Swine, G-4 virus
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்