×

மேற்குவங்கத்தில் இலவச ரேஷன் திட்டம்.: அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் இலவச ரேஷன் திட்டம் 2021 ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிவிட்டுள்ளார். தற்பொழுது வழங்கப்படும் இலவச ரேஷன் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொன்டு 2021 ஜூன் வரை நீட்டிப்பதாக மேற்குவங்க முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கு பல மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் அதிகம் கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களில் மேற்குவங்கம் ஆறாவது  இடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீடிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நவம்பர் மாதம் வரைக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். ஐந்து மாதங்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை அத்துடன் ஒரு கிலோ கடலைப் பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்து இருந்தார்.

மேலும் இதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 80 கோடி குடும்பங்கள் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் திட்டத்தை நீட்டிப்பதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : West Bengal ,Mamata Banerjee , Free, ration , West Bengal, Mamata Banerjee ,
× RELATED ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை