பெல்லாரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல் கண்ணியமற்ற நிலையில் அடக்கம்

வீடியோ லிங்க்: https://youtu.be/mUkVFfcjreU

பெல்லாரி:  கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மனிதாபிமானமற்ற முறையில் அடக்கம் செய்யும் நிகழ்வு வீடியோவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3395க்கும் மேற்பட்டோராராக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில்  12 பேர் உயிரழிந்துள்ளனர்.  இதனைத்தொடர்ந்து இறந்தவர்களின் உடலை மனிதாபிமானமற்ற முறையில் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வு அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

இதற்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெல்லாரி மாவட்டத்தில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில் சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டு, அங்கு கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இறந்தோரின் உடல்களை துப்புரவு பணியாளர்கள் மற்றும் அடக்கம் செய்பவர்கள் மிகவும் அவமதிக்கும் விதத்தில் அதனை செய்துவருகின்றனர். அதாவது, உடலை தரத்தரவென இழுத்து குழிகளில் தூக்கிப்போட்டு புதைக்கின்றனர்.

தற்போது, இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகி நாடு முழுவதும் மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதாவது, வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும், மேலும், இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் அடக்கம் செய்வது தவறு என்றும் பல சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் நிகழ்வு குறித்து விசாரணை நடத்தவேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>