×

பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜுக்கு உடல் தகுதி சான்று அளித்த அரசு மருத்துவர் 4 நாட்கள் விடுப்பில் சென்ற தகவலால் பரபரப்பு!!

கோவில்பட்டி: கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த தந்தை, மகனுக்கு உடல் தகுதி சான்று அளித்த மருத்துவர் விடுப்பில் சென்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது. சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நாடு முழுவதும் இந்த மரணத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் மதுரை ஐகோர்ட் கிளை அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது என்பதும், இதனால் சாத்தான்குளத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் மட்டுமின்றி அரசு மருத்துவர்கள், இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் உள்பட பலர் குற்றம் சாட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் ஆகிய இருவரையும் சிறையில் அடைக்க உடல் தகுதி சான்று அளித்த மருத்துவர் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் இறந்த செய்தி அறிந்து திடீரென நான்கு நாட்கள் விடுப்பில் சென்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் அந்த மருத்துவர் தற்போது மருத்துவ விடுப்பில் சென்று உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சாத்தான்குளம் அரசு மருத்துவர் மருத்துவ விடுப்பில் சென்று உள்ளதை சுகாதாரத்துறை இணை இயக்குனர் இசக்கி என்பவர் உறுதி செய்துள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸை சிறையில் அடைக்க உடல் சான்றிதழ் அளித்த மருத்துவர் திடீரென மருத்துவ விடுப்பில் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : doctor ,Jayaraj ,Pennix ,Doctor Who Certified Fenix , Pennix and Jayaraj are physically certified by a doctor who went on leave for 4 days
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...