×

அலுவலகத்தில் முகக்கவசம் அணிய சொன்னதால் ஆத்திரம்: மாற்றுத்திறனாளி பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய அலுவலக மேலாளர்

வீடியோ லிங்க்: https://youtu.be/vxL1uFTAyBc

நெல்லூர்: ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மண்டல அலுவலகத்தில் முகக்கவசம் அணியும்படி சொன்ன ஒப்பந்த ஊழியரை அலுவலக மேலாளர், இரும்பு ராடால் கண்மூடித்தனமாக அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்,  நெல்லூரில் உள்ள சுற்றுலாத்துறை ஓட்டல் மற்றும் மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் உஷாராணி என்பவர்,  இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உஷாராணி பணியில் இருந்தபோது அதே அலுவலகத்தில் மேலாளராக பணிபுரியும் பாஸ்கர் ராவ் என்பவர்  அங்கு வந்தார். இதனையடுத்து முக கவசம் அணிந்து பேசும்படி உஷாராணி மேலாளருக்கு தெரிவித்தார்.


இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் ராவ் மாற்றுதிறனாளி பெண் என்று கூட பார்க்காமல் உஷா ராணியை கீழே தள்ளி தலைமுடியை பிடித்து இரும்பு ராடால் கொலை முயற்சி செய்யும் விதமாக அடித்தார். சக ஊழியர்கள் பாஸ்கர் ராவை தடுக்க முயன்றும் அவர் தொடர்ந்து தாக்கினார் .இதனால் அலுவலகத்தில் பணிபுரிந்த சக ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து உஷாராணி தர்காமிட்டா காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக இன்று புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பாஸ்கர் ராவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுற்றுலாத்துறை அமைச்சர் அவந்தி சீனிவாஸ் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Tags : office ,office manager , Disabled woman beaten for asking her Higher authority to wear mask
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...