×

கல்விக்கட்டண வழக்கு..பெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

சென்னை: பெற்றோர் தாமாக முன்வந்து கல்விக்கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் என்பவர் தான், அந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது: தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பள்ளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். மேலும் கடந்த சில மாதங்களாக பள்ளிகளில் பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருகிறது.

எனவே கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதித்தால் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். அதனால் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் தமிழக அரசு ஜூன் 30-ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இதனைத்தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்து அப்போது தமிழக அரசு சார்பில், பெற்றோர் தாமாக முன்வந்து கல்விக்கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Tamil Nadu ,Government , restriction, payment , personal ,Tamil Nadu ,Government
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...