×

லடாக் எல்லை பிரச்சனை முடிவுக்கு வருமா.! இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகளுக்கு இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை..!!

டெல்லி : லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியது. 3-வது கட்ட பேச்சுவார்த்தை இரு நாட்டு எல்லையில் தொடங்கியது. லடாக்கில் பதற்றத்தை தணிப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நடைபெற்று பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழுவினரும், சீன தரப்பில் திபெத் ராணுவ படைப்பிரிவு கமாண்டர் தலைமையிலான குழுவும் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக நடந்த பேச்சுவாத்தையில் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்ப பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இரு நாட்டு படை விலக்கலுக்கான நடவடிக்கைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் சீனா அதனை கடைப்பிடிக்கவில்லை என தெரிகிறது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவி, இந்திய பகுதிக்குள் முகாமிட்டு உள்ளதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்துள்ளது.

இதை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவிலான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் உள்ள சுசுல் செக்டாரின் இந்திய பகுதிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எல்லை பிரச்சனை  தீர்ப்பது குறித்தும், படைகளை விலக்கிக்கொள்வதற்கான விதிமுறைகளை இறுதி செய்வது தொடர்பாக இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Tags : Ladakh ,talks ,China ,hold talks ,India ,Army ,Army officers , Ladakh Border Problem, India, China, Military Officers
× RELATED மோடியின் சீன உத்தரவாதம் லடாக் மக்களுக்கு துரோகம்: கார்கே சாடல்