×

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணமடைந்த வழக்கில் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இன்றே விசாரணையை தொடங்க வேண்டும்: மதுரை கிளை ஆணை

மதுரை: சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இன்றே விசாரணையை தொடங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். சாட்சியளித்த பெண் காவலர் ரேவதி, அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சாத்தான்குளம் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை, நடுவர் அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளனர். அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்க நெல்லை சரக டிஐஜிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Anil Kumar ,CBIID ,trial ,death ,Madurai , CBIID DSP Anil Kumar, initiate inquiry,father's son's,death
× RELATED சிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில் பல லட்சம்...