×

ஜெயராஜ், பென்னிக்ஸ்-ஐ அடித்த லத்தியில் ரத்தக் கறை.! முக்கிய ஆதாரங்கள் அழிப்பு..!! மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அறிக்கையில் தகவல்

மதுரை: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்-ஐ விடிய விடிய லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார் என உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பிய அறிக்கையில் கூறியுள்ளது. சாத்தான்குளம் காவல்துறையினர் தடயங்களை அழிக்க முயன்றனர் எனவும்., விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் மாஜிஸ்திரேட் குற்றம் சாட்டியுள்ளார். சிசிடிவி காட்சி பதிவுகள் அழிக்கப்பட்டடிருந்தன எனவும் அவர் தெரிவித்தார். கூடுதல் எஸ்பியும், டிஎஸ்பியும் நிகழ்விடத்தில் இருந்தும் விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சாட்சி ஆவணத்தில் கையெழுத்திட மறுத்த பெண் காவலர், உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்த பின்னரே கையெழுத்திட்டார் என்று மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.

லத்தியில் ரத்தக் கறை:
லத்தி மற்றும் மேஜையில் ரத்தக் கறை இருந்தது சாட்சியம் மூலம் தெரியவந்துள்ளது என்று மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
லத்தியை கேட்டபோது காவலர் மகாராஜன் முன்னுக்கு பின் முரணாக பேசினார் மாஜிஸ்திரேட் கூறினார். காவலர் மகாராஜனிடம் லத்தியை கேட்டுக்கொண்டிருந்த போது அங்கிருந்த மற்றொரு காவலர் தப்பியோடிவிட்டார் என்று பாரதிதாசன் அறிக்கையில் கூறியுள்ளார். ரத்தக்கறை மற்றும் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

சிபிசிஐடி விசாரணை தொடங்க ஆணை:
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணையை தொடங்க மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார் இன்றே விசாரணையை தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணை தொடங்குவதற்குள் தடயங்களை அழிக்க வாய்ப்பு இருப்பதால் நீதிபதிகள் சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்க மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இன்று மதியம் உத்தரவு:
மாஜிஸ்திரேட் புகார் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று மதியம் உத்தரவு என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு விசாரணைக்கு சென்ற போது போலீசார் மிரட்டியதாக மாஜிஸ்திரேட் புகார் அளித்துள்ளார்.


Tags : Bharathidasan ,Jayaraj ,Pennix , Jayaraj, Pennix, Latin blood stain, major sources, Magistrate Bharathidasan
× RELATED முதலியார்பேட்டையில் குழு லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த பெண் கைது