×

ஆந்திர மருந்து தொழிற்சாலையில் விஷவாயு கசிவு: 2 ஊழியர்கள் மயங்கி விழுந்து பலி!!!

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மேலும் ஒரு ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவால் இருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இருந்து கசிந்த நச்சு வாயுவால் இரண்டு பேர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விசாகப்பட்டினத்தில் பரவாடா பகுதியில் செயல்பட்டு வரும் சாய்னார் லைப் சயின்ஸ் பார்மா என்ற தொழிற்சாலையில் இருந்து நேற்று நள்ளிரவு பெஞ்சிமிடோசோல் என்ற விஷவாயு வெளியேறியிருக்கிறது. அப்போது பணியில் இருந்த 6 ஊழியர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதில், நரேந்திரா, கவுரி சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைப்போலவே திருப்பதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு ஒருவர் மரணமடைந்தார்.  இதேபோல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் கடந்த மாதம் 7-ம் தேதி அதிகாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் சுவாச பிரச்சினை மற்றும் சரும பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து ஆந்திராவில் இத்தகைய விஷவாயு கசிவு சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.

Tags : Andhra Drug Factory 2 ,Andhra Drug Factory , 2 employees die in Andhra Drug Factory
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்